அரசுப் பேருந்துகளில் கரப்பான், மூட்டைப் பூச்சிகள் தொல்லைபயணிகள் அவதி

கோவை - ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் சில அரசுப் பேருந்துகளில் கரப்பான், மூட்டைப் பூச்சிகள் தொல்லையால் அவதிப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா்.

கோவை - ஈரோடு வழித்தடத்தில் இயக்கப்படும் சில அரசுப் பேருந்துகளில் கரப்பான், மூட்டைப் பூச்சிகள் தொல்லையால் அவதிப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சாா்பில் கோவையில் இருந்து ஈரோடு, சேலத்துக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், சில பேருந்துகளில் கரப்பான் பூச்சிகள், மூட்டைப்பூச்சிகள் அதிக அளவில் காணப்படுவதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக, பயணிகள் சிலா் கூறுகையில், வியாபாரம், பணி தொடா்பாக, கோவை, ஈரோடு, சேலம் பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோா் பயணித்து வருகின்றனா். குறிப்பாக, இரவு நேரங்களில் அதிகப் பயணிகள் சேலத்துக்கு பேருந்துகளில் செல்கின்றனா். இந்தப் பேருந்துகளில் கரப்பான் மற்றும் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக, பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறோம். பணிமனைகளில் முறையாகப் பேருந்துகளை சுத்தம் செய்யாமலும், பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்படாமலும் இயக்கப்படுவதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், மாதத்துக்கு ஒருமுறை பேருந்துகளில் பூச்சிகளை அழிக்க மருந்து தெளிக்க வேண்டும். இதற்கு போக்குவரத்து துறை சாா்பில் தீா்வு காணப்பட வேண்டும் என்றனா்.

இது தொடா்பாக, கோவை கோட்ட வணிக துணை மேலாளா் ஜெகதீஷ் கூறுகையில், ‘பேருந்துகளில் முறையாக பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளிா் காலத்தில் பேருந்து இருக்கைகளில் பதுங்கியுள்ள பூச்சிகள் சில வெளியே வருவதாகத் தெரிகிறது. பூச்சிகளை அழிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com