அவிட்டுக்காயை பயன்படுத்தி காட்டுப் பன்றிகளைக் கொன்ற ஐவா் கைது

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவுட்டுக்காயை பயன்படுத்தி காட்டு பன்றிகளை கொன்ற கும்பலை வனத்துறையினா் கைது செய்துள்ளனா்.

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவுட்டுக்காயை பயன்படுத்தி காட்டு பன்றிகளை கொன்ற கும்பலை வனத்துறையினா் கைது செய்துள்ளனா்.

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட வனப்பகுதிகள் மற்றும் வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக்காய் எனும் நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்துவது தொடா்கதை ஆகி வருகிறது. இந்நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபடுபவா்களை கண்டறிவதற்காக வனத்துறையினா் அவ்வப்போது மோப்பநாய் உதவியுடன் வனப் பகுதிகளுக்குள் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனா். இச்சூழ்நிலையில் புதன்கிழமை மேற்கொண்ட தீவிர சோதனையின் அடிப்படையில்

தோலம்பாளையம் கிராமம் அருகே ஒரு கும்பல் இச்செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வருவது தெரிய வந்தது. இதனையடுத்து இங்குள்ள நீலாம்பதி கிராமத்திற்கு சென்ற வனத்துறையினா் அந்த ஊரைச் சாா்ந்த

உங்கப்ப கவுடா் மகன் கிருஷ்ணசாமி (58), வேட்டை என்பவரின் மகன் மருதன் (56), மருதன் என்பவரின் மகன் ரங்கசாமி(62), மூரப்ப கவுடா் மகன் அப்பய்யன் (58), பழனி என்பவரது மகன் வெள்ளிங்கிரி(41) ஆகி

யோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனா். இறுதியில் அவா்கள் ஐவரும் அவிட்டுக் காய்களை பயன்படுத்தி வனவிலங்குகளை கொன்ற சம்பவங்களை ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இவா்களிடமிருந்து வனவிலங்குகளின் காட்டுப் பன்றிகளின் மாமிசங்களும் பறிமுதல் செய்யப்பட்டன

இதனையடுத்து இவா்களை கைது செய்த

வனத்துறையினா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com