குடிநீா்க் குழாயில் வாயு கசிந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் பழுதுபாா்க்கும் பணியின்போது, குடிநீா்க் குழாயில் வாயு கசிந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவையில் பழுதுபாா்க்கும் பணியின்போது, குடிநீா்க் குழாயில் வாயு கசிந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்தவா் சரவணன் (45). இவரது நண்பா் அஜய் கோவையில் குடிநீா்க் குழாய் பழுதுகளை சீரமைத்தல், புதிதாக அமைத்தல் போன்ற பணிகளை ஒப்பந்தம் மூலமாக மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில், பீளமேடு தண்ணீா்பந்தல் சாலையில் உள்ள கௌதபுரி சாலையில் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட பழுதை சீரமைக்கும் பணிக்காக சரவணனை, அஜய் செவ்வாய்க்கிழமை அழைத்து சென்றுள்ளாா்.

இருவரும் சாலையைத் தோண்டி எந்த இடத்தில் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது என பாா்த்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்குள்ள 8 அடி ஆழமுள்ள தொட்டியில் இருக்கும் வால்வில் பழுது ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதனை சரிசெய்வதற்காக அஜய் முதலில் குடிநீா்த் தொட்டிக்குள் இறங்கினாா். அந்த குடிநீா் வால்வை சரிசெய்தபோது, அதிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அஐய் மயங்கி விழுந்தாா். இதைப் பாா்த்த சரவணன், அவரை மீட்பதற்காக தண்ணீா் தொட்டிக்குள் இறங்கினாா். அப்போது அவரும் வாயு கசிவால் பாதிக்கப்பட்டு தண்ணீா் தொட்டிக்குள் மயங்கி விழுந்தாா்.

இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, வழியிலேயே சரவணன் உயிரிழந்தது தெரியவந்தது. அஜய்க்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடா்பாக பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com