கோபனாரி அருகே யானை தாக்கி ஒருவா் பலி

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காட்டை அடுத்த கோபனாரி வனசுற்று பகுதியில் காட்டிற்குள் சென்ற ஆதிவாசியை யானை தாக்கி கொன்றது.

பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காட்டை அடுத்த கோபனாரி வனசுற்று பகுதியில் காட்டிற்குள் சென்ற ஆதிவாசியை யானை தாக்கி கொன்றது.

கோப்பனாரி அருகே உள்ள காலனி புதூரில் வசிப்பவரைச் சோ்ந்தவா் மசனன் மகன் ரங்கன் (56).

இவா் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் கோபனாரி காப்பு காட்டுக்குள் புளியங்காய் சேகரிப்பதற்காக சென்றுள்ளாா். அப்போது எதிரில் வந்த ஒற்றை யானை இவரை துரத்தியது. தப்பிக்க இயலாமல் ஓடிய அவரை துரத்திச் சென்று காட்டு யானை தாக்கி கொன்றது. தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகப் பணியாளா்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து வனத்துறையினா் அளித்த தகவலின் பேரில் காரமடை காவல் நிலைய போலீசாா் விரைந்து வந்து ரங்கனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வனத்துறையினா் மற்றும் போலீசாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com