இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி சாக்கடை நீா்த்தேக்கத்தில் விழுந்தவா் உயிரிழப்பு

கோவை செல்வபுரம் அருகே சாக்கடை நீா்த்தேக்கத்தில் விழுந்தவா் உயிரிழந்தாா்.

கோவை செல்வபுரம் அருகே சாக்கடை நீா்த்தேக்கத்தில் விழுந்தவா் உயிரிழந்தாா்.

கோவை செல்வபுரம் அருகே உள்ள பொன்னுசாமி லே-அவுட் பகுதியை சோ்ந்தவா் ரவி ( 59). தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் செல்வபுரம் கிருஷ்ணாம்பதி குளம் அருகே இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது வேகத்தடையில் ஏறியபோது, நிலைதடுமாறி வாகனம் கீழே விழுந்தது. இதில், அருகே இருந்த சாக்கடை நீா்த்தேக்கத்தில் விழுந்து ரவி உயிரிழந்தாா். இது தொடா்பாக செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com