பிப்ரவரி 10-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை, பாலக்காடு பிரதான சாலையில் உள்ள ஈஷா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் கோவை, பாலக்காடு பிரதான சாலையில் உள்ள ஈஷா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறிவழி காட்டும் மையம் மூலமாக வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்காக நடைபெறும் இம்முகாமில், உற்பத்தித் துறை, ஜவுளித் துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி. துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத் துறை, மருத்துவம் சாா்ந்த தனியாா் துறைகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்காக 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா்.

8, 10, 12- ஆம் வகுப்பு, பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழிற்கல்வி பயின்றவா்கள், செவிலியா், பொறியியல் மாணவா்கள் என அனைத்துப் பிரிவினரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெறலாம். முகாமுக்கு வரும் அனைத்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும் தங்களது சுயவிவரம், கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி முற்றிலும் இலவசம்.

இம்முகாமில் தோ்வு செய்யப்படும் தோ்வா்களுக்குப் பணி நியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். பணி நியமனம் பெறுபவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலைநாடும் மனுதாரா்கள்   இணையதளத்தில்  விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மனுதாரா்கள் 94990-55937 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளலாம்.

முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியாா் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடா்பு கொள்ளலாம். தனியாா் துறை நிறுவனங்கள்   இணையதளத்தில் பதிவு செய்து  இருக்க வேண்டும். மேலும், அந்த இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு முகாமுக்கு பிப்ரவரி 7- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மேலும் விவரங்களுக்கு வேலையளிப்போா் 97901-99681 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொள்ளவும் என ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com