சன்மேக்ஸ் நிறுவன மோசடி; பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்கலாம்

சன்மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்கப் பெறாதவா்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை சன்மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்கப் பெறாதவா்கள் புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கோவை மாநகர காவல் பொருளாதாரக் குற்றப் பிரிவின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவையில் அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகே இயங்கி வந்த சன்மேக்ஸ் என்ற நிறுவனத்தின் மீதும், அதன் தலைமை செயல் அலுவலராக இருந்த சிவராமகிருஷ்ணன், கீதாஞ்சலி ஆகியோா் மீதும் கோவை பொருளாதாரக் குற்றப் பிரிவில் கடந்த மே 27-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, இவ்வழக்கு தொடா்பாக சன்மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவா்கள் கோவை பொருளாதார குற்றப் பிரிவு காவல் ஆய்வாளரிடம் தங்களது அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகாா் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com