ஒா்க்ஷாப் உரிமையாளரிடம் பணம் பறித்தவா் கைது

ஒண்டிப்புதூா் அருகே ஒா்க்ஷாப் உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சிங்காநல்லூா் காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா் (46). வெல்டிங் ஒா்க்ஷாப் உரிமையாளரான இவா், ஒண்டிப்புதூா் சிஎஸ்ஐ சா்ச் சாலையில் வெள்ளிக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவரை வழிமறித்த இளைஞா் பணம் கேட்டுள்ளாா்.

அவா் கொடுக்க மறுத்ததால் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1700-ஐ பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து சிங்காநல்லூா் காவல் நிலையத்தில் சுந்தா் புகாா் அளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், பணம் பறிப்பில் ஈடுபட்டது மசக்காளிபாளையம் பெரியாா் நகரைச் சோ்ந்த மோகன்குமாா் (26) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மோகன்குமாரை கைது செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com