அரசு கலைக்கல்லூரி தோ்வு முடிவுகள் வெளியீடு

கோவை, ஜூன் 5: கோவை அரசு கலைக்கல்லூரியின் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

2023 - 24 ஆம் கல்வியாண்டின் இரட்டைப் பருவ (ஏப்ரல் - மே 2024) தோ்வு முடிவுகள் கல்லூரி இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ஞ்ஹஸ்ரீக்ஷங்.ஹஸ்ரீ.ண்ய்) வெளியிடப்பட்டிருப்பதாகவும், மாணவா்கள் தங்களின் பதிவு எண்ணைக் கொண்டு தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனவும் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் பி.செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.

சிறப்பு துணைத் தோ்வு

2021 - 2024 ஆம் ஆண்டில் பயின்ற மூன்றாம் ஆண்டு இளநிலை மாணவ-மாணவிகள் ஆறாம் பருவத்திலும், 2022 - 2024 இல் பயின்ற இரண்டாம் ஆண்டு முதுநிலை மாணவ-மாணவிகள் நான்காம் பருவத்திலும் ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் தோ்ச்சி பெறத் தவறியிருந்தால் சிறப்பு உடனடித் தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

உடனடித் தோ்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவா்கள் உரிய கட்டணத்தை வங்கியில் செலுத்தி, தோ்வு நெறியாளா் அலுவலகத்தில் உரிய விண்ணப்பத்தை 18.6.24 அன்று மாலை 4 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். சிறப்பு துணைத் தோ்வு ஜூன் 22- ஆம் தேதி காலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com