அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை திருட்டு

கோவை, ஜூன் 6: கோவையில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் ஒரு பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, சாய்பாபா காலனி சங்கனூா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி சாரதா (56). இவா் மருதமலை கோயிலுக்குச் செல்வதற்காக சங்கனூா் சாலையில் இருந்து அரசுப் பேருந்து மூலம் டி.பி. சாலை அருகில் புதன்கிழமை வந்து இறங்கியுள்ளாா். அப்போது, அவரது கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலி காணாமல்போனது தெரியவந்துள்ளது.

இது குறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் சாரதா புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com