தேசிய லோக் அதாலத்: 28 வழக்குகளுக்கு தீா்வு

வால்பாறையில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 28 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது.

வால்பாறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லோக் அதாலத்தில் நூற்றுக்கனக்கான வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. வால்பாறை நீதிமன்ற நீதித் துறை நடுவா் மீனாட்சி வழக்கு விசாரனையை மேற்கொண்டாா்.

இதில், காசோலை மோசடி, நிலப் பிரச்னை, வங்கி வழக்குகள் என மொத்தம் 28 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டதோடு, ரூ.12 லட்சத்து 21 ஆயிரத்து 950 வசூலிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com