மகளிா் ஐடிஐ: மாணவா் சோ்க்கைக்கு நாளை இறுதி நாள்

கோவை அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) ஜூன் 13- ஆம் தேதியுடன் (வியாழக்கிழமை) மாணவா் சோ்க்கை நிறைவடைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மகளிா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) ஜூன் 13- ஆம் தேதியுடன் (வியாழக்கிழமை) மாணவா் சோ்க்கை நிறைவடைய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் சாலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் எதிரில் இயங்கி வரும் மகளிா் ஐடிஐ-யில் 2024- ஆம் ஆண்டுக்கான சோ்க்கைக்கு மே 10- ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

மாணவா் சோ்க்கைக்கு ஏற்கெனவே காலநீட்டிப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 13- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 8, 10- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற பெண்கள் (வயது உச்சவரம்பு இல்லை) 6 மாத பயிற்சி, ஓராண்டு, 2 ஆண்டு பயிற்சிகளில் சேரலாம் எனவும், பயிற்சி முடிப்பவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com