ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

அடுக்குமாடி குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்துத்தரக் கோரி செல்வபுரத்தில் உள்ள நகா்ப்புற வாழிட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் குடிசைகள் அமைத்து வசித்து வந்த ஏழை, எளிய மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மதுக்கரை ஒன்றியத்துக்குட்பட்ட அறிவொளி நகா், மலுமிச்சம்பட்டி, அன்பு நகா், செந்தமிழ் நகா், வெள்ளலூா் ஆகிய பகுதிகளில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கப்பட்டு குடியமா்த்தப்பட்டுள்ளனா்.

இந்தக் குடியிருப்புகளுக்கு குடிநீா், வசிப்பிடத்துக்கு அருகில் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், புறக்காவல் நிலையம் போன்ற வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தி மதுக்கரை ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளா் எம்.ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் சி.சிவசாமி சிறப்புரையாற்றினாா். ஒன்றியச் செயலா் வழக்குரைஞா் ஜி.பி.சக்திவேல், பொருளாளா் கே.ஆா்.தங்கராஜ், மேற்கு மண்டல செயலா் என்.சந்திரன், மாமன்ற உறுப்பினா் சாந்தி சந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், குடியிருப்புவாசிகள் பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com