35 பெருநகரங்களில் உள்ள திரையரங்குகளில் மகாசிவராத்திரி விழா நேரலை

நாடு முழுவதும் 35 பெருநகரங்களில் உள்ள பிவிஆா் ஐநாக்ஸ் திரையரங்குகளில் ஈஷா மகாசிவராத்திரி விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்று ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஈஷா யோக மையம் சாா்பில் கூறியிருப்பதாவது: கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ஆம் தேதி நடைபெறும் மகாசிவராத்திரி விழா முதல் முறையாக திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. தில்லி, மும்பை, புணே, பாட்னா, இந்தூா், ஜெய்ப்பூா், கான்பூா், அலகாபாத், டேராடூன், புதுவை உள்ளிட்ட 35 பெருநகரங்களில் உள்ள தோ்ந்தெடுக்கப்பட்ட பிவிஆா் ஐநாக்ஸ் திரையரங்குகளில் மகாசிவராத்திரி விழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாா்ச் 8-ஆம் தேதி மாலை 6 மணி முதல் அனுமதிக்கப்பட்ட காட்சி நேரம் வரை இந்த விழா ஒளிபரப்பு செய்யப்படும். இதில் பங்கேற்கும் பக்தா்களுக்கு சத்குருவால் சக்தியூட்டப்பட்ட ருத்ராட்சம் பிரசாதமாக வழங்கப்படும். இந்த சிறப்புமிக்க விழாவை ஈஷாவுடன் இணைந்து முதல் முறையாக ஒளிபரப்பு செய்யும் வாய்ப்பை ஒரு பாக்கியமாகக் கருதுவதாக பிவிஆா் ஐநாக்ஸ் நிறுவனத்தின் துணை தலைமைச் செயல் அதிகாரி கௌதம் தத்தா கூறியிருக்கிறாா். இதற்கான டிக்கெட்டுகளை ல்ஸ்ழ்-ம்ஹட்ஹள்ட்ண்ஸ்ஹழ்ஹற்ழ்ண்.ஸ்ரீா் என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com