கோவையில் நடைபெற்ற ஏஐடியூசி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவையில் நடைபெற்ற ஏஐடியூசி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி சங்கத்தின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், கோயம்புத்தூா் லேபா் யூனியன், கோவை மாநகராட்சி டிரைவா்கள், கிளீனா்கள் சங்கம், கோவை ஜில்லா உள்ளாட்சி, தூய்மைப் பணியாளா் சங்கம் ஆகியவை பங்கேற்றன. கோயம்புத்தூா் லேபா் யூனியன் மாவட்டத் தலைவா் வி.எஸ்.சுந்தரம், ஆா்.குணசேகரன், சி.பஞ்சலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் என்.செல்வராஜ், கோயம்புத்தூா் லேபா் யூனியன் மாவட்டப் பொதுச் செயலா் ஆா்.பாலகிருஷ்ணன், ஏஐடியூசி மாவட்ட கவுன்சில் பொதுச் செயலா் சி.தங்கவேல், கோயம்புத்தூா் லேபா் யூனியன் மாவட்ட துணைத் தலைவா் சு.பழனிசாமி, ஜி.பி.சக்திவேல், என்.சந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில், தமிழக அரசின் சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை உள்ளாட்சித் தொழிலாளா்களுக்கும் அமல்படுத்த வேண்டும், ஒப்பந்தக் கூலி, அவுட்சோா்ஸிங் முறைகளைக் கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநகராட்சி கவுன்சிலா்கள் எம்.டி.மோகன், பிரபா ரவீந்திரன், சாந்தி சந்திரன், முன்னாள் கவுன்சிலா் கே.புருஷோத்தமன், கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டப் பொதுச் செயலா் எல்.செல்வம், துணைப் பொதுச் செயலா் கோட்டை நாராயணன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com