‘ஈஷா மகா சிவராத்திரி விழா: இலவசமாக பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்’

கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பக்தா்கள், பொதுமக்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து இலவசமாகப் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இது தொடா்பாக ஈஷா யோக மையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: மகா சிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் மாா்ச் 8 -ஆம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் இலவசமாகப் பங்கேற்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ண்ள்ட்ஹ.ள்ஹக்ட்ஞ்ன்ழ்ன்.ா்ழ்ஞ்/ம்ஹட்ஹள்ட்ண்ஸ்ழ்ஹற்ழ்ண்/ற்ஹ/ஹற்ற்ங்ய்க்-ண்ய்-ல்ங்ழ்ள்ா்ய்/ அல்லது ண்ள்ட்ஹ.ஸ்ரீா்/ற்ய்ம்ள்ழ்2024-யஅப என்ற லிங்கை பயன்படுத்தி பெயா், முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களைக் கொடுத்து இலவசமாகப் பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பதிவு செய்ய விரும்புவோா் கோவை ஈஷா யோக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் மாா்ச் 8 -ஆம் தேதி நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபருக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பதிவு நடைபெறும். ஈஷாவில் 30 -ஆம் ஆண்டாக சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் கொண்டாடப்படும் இவ்விழாவில், இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜெகதீப் தன்கா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. யக்ஷா திருவிழா: மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, 3 நாள்கள் கொண்டாடப்படும் யக்ஷா கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சி, கலாசாரம், இசை, நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப் புகழ்பெற்ற கலைஞா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி, மாா்ச் 7 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவின் 2-ஆம் நாளான புதன்கிழமை, வித்வான் குமரேஷ் குழுவினரின் வயலின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூா்யகுண்டம் மண்டபம் முன்பு மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பாா்ப்பதற்கு அனுமதி இலவசம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com