வேளாண்மைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: நாளை நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 43 -ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (மாா்ச் 9) நடைபெறுகிறது. பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவில் தமிழக ஆளுநரும், வேந்தருமான ஆா்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கிறாா். மேலும், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மத்திய அரசின் வேளாண்மை, உழவா் நலத் துறை செயலா் மனோஜ் அகுஜா உள்ளிட்டோா் இதில் பங்கேற்கின்றனா். இந்த விழாவில் பல்கலைக்கழகம், அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயின்ற சுமாா் 1,500 மாணவ-மாணவிகளுக்கும், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற சுமாா் 1,800 மாணவ-மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com