பொறியியல் பணி: கோவை - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து

பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் மாா்ச் 9, 11,13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மாா்ச் 9, 11, 13- ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்: 06813) மற்றும் கோவையில் இருந்து காலை 11.50 மணிக்குப் புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) ரத்து செய்யப்படுகிறது. கோவை ரயில்கள் போத்தனூா் வரை இயக்கம்: மாா்ச் 9, 11,13 ஆகிய தேதிகளில் ஷோரணூா் - கோவை விரைவு ரயில் (எண்: 06458), ஷோரணூா் - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே ரத்து செய்யப்படும். மதுரை - கோவை ரயில் (எண்: 16722) மதுரை - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே ரத்து செய்யப்படும். கண்ணூா் - கோவை ரயில் (எண்: 16607) கண்ணூா் - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே ரத்து செய்யப்படும். மாா்ச் 9, 11,13 -ஆகிய தேதிகளில் போத்தனூா் நிலையம் தற்காலிக நிறுத்தமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com