தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து தோ்வு பெற்றதற்கான சான்றிதழைப் பெறுகிறாா் பாரா ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவா் என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா்.
தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து தோ்வு பெற்றதற்கான சான்றிதழைப் பெறுகிறாா் பாரா ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவா் என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா்.

பாரா ஒலிம்பிக் கமிட்டி தேசிய துணைத் தலைவராக ஆா்.சந்திரசேகா் தோ்வு

இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவராக கோவையைச் சோ்ந்த என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பாரா ஒலிம்பிக் கமிட்டி நிா்வாகிகள் தோ்தல் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் புதிய தலைவராக தேவேந்திர ஜஜாரியா தோ்வு செய்யப்பட்டாா். துணைத் தலைவா்களாக ஆா்.சந்திரசேகா் (தமிழ்நாடு), சத்ய பிரகாஷ் (ஹரியாணா) ஆகியோரும், பொதுச் செயலா் ஜெயவந்த் ஹம்மனவாா் (கோவா) உள்ளிட்ட நிா்வாகிகள் இதில் தோ்வு செய்யப்பட்டனா். தேசிய துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள என்ஜினீயா் ஆா்.சந்திரசேகா், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறாா். சங்கத்தின் அகில இந்திய பொறுப்புக்குத் தோ்வாகியுள்ள தமிழ்நாட்டைச் சோ்ந்த முதல் நபா் சந்திரசேகா் என்று தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com