வால்பாறையில் மக்கள் நீதிமன்றம்

வால்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்) 62 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றதுக்கு நீதித் துறை நடுவா் ஆா்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், கிரிமினல் வழக்குகள், பண மோசடி வழக்கு, தொழிலாளா் வழக்குகள், நில மோசடி வழக்குகள் என நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நிலையில் 62 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு மொத்தம் ரூ. 36 லட்சத்து 96 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com