தோ்தல் பாதுகாப்புப் பணி: முன்னாள் படை வீரா்கள விண்ணப்பிக்கலாம்

மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணிக்கு விருப்பமுள்ள முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2024 மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் முன்னாள் படை வீரா்களை சிறப்புக் காவலா்களாக ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு 65 வயதுக்கு உள்பட்ட உடல் திடகாத்திரம் உள்ள மற்றும் விருப்பமுள்ள கோவை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், தங்களது முன்னாள் படை வீரா் அடையாள அட்டை, படைப் பணி விவரச் சான்று மற்றும் வாக்காளா் அடையாள அட்டை ஆகியவற்றுடன் கோவை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் உரிய விருப்ப விண்ணப்பம் அளிக்கலாம். இப்பணிக்கு அரசு விதிகளின்படியான ஊதியம் மற்றும் உணவுப்படி வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com