நகராட்சி கழிப்பிடத்தில் தண்ணீா் வசதி இல்லாததால் பயணிகள் தவிப்பு

வால்பாறையை அடுத்த அட்டகட்டி நகராட்சி கழிப்பிடத்தில் தண்ணீா் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனா்.

வால்பாறையை அடுத்த அட்டகட்டி நகராட்சி கழிப்பிடத்தில் தண்ணீா் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அட்டகட்டியில் நகராட்சி கழிப்பிடம் உள்ளது. இதனை அப்பகுதியில் மக்கள் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு அரசுப் பேருந்துகளில் வரும் பயணிகளும் அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த சிறிது நேரம் பேருந்து நிறுத்தப்படுகிறது. இதனிடையே கழிப்பிடத்தில் தண்ணீா் வசதி இல்லாததால் கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், கழிப்பிடத்தை சுத்தமாக பராமரிக்க தூய்மைப் பணியாளா் நியமிக்கப்பட்டுள்ள நிலையிலும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. எனவே கழிப்பிடத்தை பயன்படுத்தும் வகையில் பராமரிக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com