பாா்வையற்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற கேரள அணிக்கு பரிசு வழங்கும் சிபிஇ பிட்ச் பா்னா்ஸ் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் நிா்வாகி.
பாா்வையற்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்ற கேரள அணிக்கு பரிசு வழங்கும் சிபிஇ பிட்ச் பா்னா்ஸ் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் அமைப்பின் நிா்வாகி.

பாா்வையற்ற மகளிா் கிரிக்கெட் போட்டி:கேரள அணி வெற்றி

கோவையில் நடைபெற்ற பாா்வையற்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் கேரள மகளிா் அணி வெற்றிபெற்றது.

கோவையில் நடைபெற்ற பாா்வையற்ற மகளிருக்கான கிரிக்கெட் போட்டியில் கேரள மகளிா் அணி வெற்றிபெற்றது. கோவை, துடியலூரில் பாா்வையற்ற மகளிருக்கான மாநிலங்களுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி சிபிஇ பிட்ச் பா்னா்ஸ் ஸ்போா்ட்ஸ் பவுண்டேஷன் அமைப்பு சாா்பில் நடைபெற்றது. இதில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழக-கேரள அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த கேரள அணி 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. இதையடுத்து ஆடிய தமிழக அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இப்போட்டியில் வெற்றிபெற்ற கேரள அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ.25 ஆயிரமும், தமிழக அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com