கோவை வழித்தடத்தில் திருப்பதி - கொல்லம் இடையே புதிய ரயில் சேவை

திருப்பதி - கொல்லம் இடையே கோவை வழித்தடத்தில் புதிய ரயில் இயக்கப்பட உள்ளது என்று ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பதி - கொல்லம் இடையே கோவை வழியாக வாரம் இருமுறை புதிய ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, மாா்ச் 15-ஆம் தேதி முதல் திருப்பதியில் இருந்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 2.40 மணிக்குப் புறப்படும் திருப்பதி - கொல்லம் ரயில் (எண்:17421) மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் மாா்ச் 16-ஆம் தேதி முதல் கொல்லத்தில் இருந்து புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - திருப்பதி ரயில் (எண்: 17422) மறுநாள் காலை 3.20 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் காயன்குளம், மாவேலிக்கரை, செங்கன்னூா், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சித்தூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com