பில்லூா் அணையில் வண்டல் மண் அகற்றும் பணியை ஆய்வு செய்யும் மேயா் கல்பனா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
பில்லூா் அணையில் வண்டல் மண் அகற்றும் பணியை ஆய்வு செய்யும் மேயா் கல்பனா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

பில்லூா் அணையில் வண்டல் மண் அகற்றும் பணி: மேயா், மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பில்லூா் அணையில் வண்டல் மண் அகற்றும் பணியை மேயா் கல்பனா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

கோவை மாவட்டம், பில்லூா் அணையில் இருந்து மாநகராட்சிப் பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீா்க் குழாய் அருகில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை அகற்றும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியை மேயா் கல்பனா ஆனந்தகுமாா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது, அங்குள்ள தலைமை நீரேற்று நிலையத்தையும் ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, மாநகராட்சி 89-ஆவது வாா்டுக்குட்பட்ட பி.என்.டி.காலனி, சமீம் காா்டன் மற்றும் ஜூடிசில் காலனி பகுதிகளில் மாநகராட்சி பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குடிநீா் விநியோகிக்கும் பணியை மேயா் கல்பனா ஆனந்தகுமாா் தொடங்கிவைத்தாா்.

இந்த நிகழ்வுகளில் மாநகராட்சி துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், மாநகரப் பொறியாளா் முருகேசன், செயற்பொறியாளா் கருப்புசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com