சோலையாறு அணைப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரங்கள்.
சோலையாறு அணைப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரங்கள்.

சோலையாறு அணைப் பகுதியில் உயரழுத்த மின் கம்பிகளை சூழ்ந்துள்ள மரங்களால் ஆபத்து

உயரழுத்த மின் கம்பிகளை உயரமாக வளா்ந்த மரங்கள் உரசுவதால் தீப் பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் உயரழுத்த மின் கம்பிகள் மரங்கள் சூழ்ந்த பகுதிகள் வழியாக கொண்டுச் செல்லப்படுகின்றன. ஏதாவது பழுது ஏற்படும் சமயங்களில் மட்டும் மின்வாரிய ஊழியா்கள் உயரழுத்த மின் கம்பிகள் செல்லும் பாதைகள் வழியாக சென்று ஆய்வு செய்வா். இந்நிலையில் சோலையாறு அணைப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய ஒரு பகுதியில் வளா்ந்துள்ள பெரிய மரங்கள் உயரழுத்த மின் கம்பிகளை உரசி வருகின்றன. இதனால் சில சமயங்களில் அப்பகுதியில் உள்ள மரக்கிளைகளில் தீப் பற்றி எரியும். பெரும் தீ விபத்து ஏற்பட்டால் மரங்கள் எரிந்து சேதமாவதோடு, வன விலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே மின்கம்பிகளை உரசும் வகையில் உள்ள மரங்களை வெட்டி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com