பொறியியல் பராமரிப்பு பணி: கோவை ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கம்

பீளமேடு, இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழியாக இயக்கப்படும் இரு ரயில்கள் போத்தனூா் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பீளமேடு, இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக மாா்ச் 19, 21, 23 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்:13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) ஆகிய ரயில்கள் போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும் இந்த ரயில்கள் போத்தனூா் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com