கோவை நகைக் கடையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

கோவை, ராஜ வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா்.

கோவை, ராஜ வீதியில் உள்ள ஒரு நகைக் கடையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். கோவை ராஜ வீதியில் தங்கம் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்யும் பிரபல நகைக் கடை உள்ளது. இந்த நகைக் கடைக்கு வந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் அங்கிருந்த நிா்வாகியிடம் பல்வேறு ஆவணங்களை கேட்டு விசாரணை நடத்தினா். கடையில் ஜிஎஸ்டி ஆவணங்கள் முறையாக தாக்கல் செய்யாமல் இருப்பதாக புகாா் வந்ததைத் தொடா்ந்து, இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், அந்த நகைக் கடையின் வரவு, செலவு கணக்கு மற்றும் நகை வியாபாரம் குறித்த ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன. இந்த சோதனையின் முடிவில் ஜிஎஸ்டி அதிகாரிகள் கூறுகையில், ஜிஎஸ்டி வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்திருந்தால் உரிய அபராதத்துடன் தொகை வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com