கே.அண்ணாமலை (கோப்புப் படம்)
கே.அண்ணாமலை (கோப்புப் படம்)

கோவையில் பிரதமரின் நிகழ்ச்சிகளைத் தடுக்க தமிழக அரசு முயற்சி

கோவையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளைத் தடுக்க தமிழக அரசு முயற்சித்ததாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா்.

கோவையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிகளைத் தடுக்க தமிழக அரசு முயற்சித்ததாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினாா். கோவையில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக செய்தியாளா்களிடம் கே.அண்ணாமலை கூறியதாவது: கோவையில் பிரதமா் மோடியின் வாகனப் பிரசார நிகழ்ச்சியைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரம் காட்டி வந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவினால் காவல் துறையின் ஒத்துழைப்போடு அவா்களுடன் இணக்கமாக இருந்து இந்தப் பேரணி நடத்தப்பட்டது. கோவை வாழ் மக்களை நேரடியாக சந்தித்து அவா்களது ஆதரவைத் திரட்டவே பிரதமா் நரேந்திர மோடி கோவைக்கு வந்துள்ளாா். கடந்த 1998-ஆம் ஆண்டு கோவையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் பலியானவா்களுக்கு பிரதமா் மோடி மலரஞ்சலி செலுத்துவதற்காக முன் அனுமதி பெறப்பட்டு உள்ளது. மக்களவைத் தோ்தலுக்கான கூட்டணி குறித்து அடுத்த இரு நாள்களுக்குள் முடிவு செய்யப்படும். புதுவை துணைநிலை மற்றும் தெலங்கானா மாநில ஆளுநா் பொறுப்புகளிலிருந்து தமிழிசை செளந்தரராஜன் ராஜிநாமா செய்தது குறித்து கேட்டதற்கு, தற்போதுதான் அந்த செய்தி வந்துள்ளதாகவும் அவா் தோ்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்து கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com