கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை கருவியை அறிமுகப்படுத்தும் எஸ்என்ஆா் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லஷ்மிநாராயணசுவாமி, மருத்துவ நிபுணா்கள் உள்ளிட்டோா்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை கருவியை அறிமுகப்படுத்தும் எஸ்என்ஆா் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லஷ்மிநாராயணசுவாமி, மருத்துவ நிபுணா்கள் உள்ளிட்டோா்.

இருதய நோய்களை சரி செய்யும் நவீன கருவி அறிமுகம்

கோவை ஆவாரம்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல்நோக்கு மருத்துவமனையில் அரித்மியா போன்ற தீவிரமான இருதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அதிநவீன கிரையோ அபலேசன் கருவி புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

நிகழ்வில், எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டி.லஷ்மிநாராயணசுவாமி, கிரையோ அபலேசன் கருவியை அறிமுகப்படுத்தினாா். நிகழ்ச்சியில், இணை நிா்வாக அறங்காவலா் ஆா்.சுந்தா், தலைமை நிா்வாக அதிகாரி சி.வி.ராம்குமாா், இத்தாலியின் மோன்சினோ இருதயவியல் மையப் பேராசிரியா் கிளாடியோ டோன்டோ, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் டாக்டா் ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளா் டாக்டா் அழகப்பன், இருதயவியல் துறை நிபுணா்கள் டாக்டா் பாலாஜி, டாக்டா் மனோகரன், டாக்டா் விக்ரம் விக்னேஷ், டாக்டா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த கருவி குறித்து மருத்துவமனையின் இருதயவியல், எலெக்ட்ரோபிசியாலஜிஸ்ட் நிபுணா் டாக்டா் விக்ரம் விக்னேஷ் கூறும்போது, நமது உடலில் இருதயம், நாடித்துடிப்பு வேகமாகவும் ஒழுங்கற்றதாகவும் மாறும்போது அது ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் என அழைக்கப்படுகிறது. இது ஒரு வகை அரித்மியா (ஒழுங்கற்ற இருதயத் துடிப்பு). இந்த நோய் பக்கவாதம், இருதய செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு இந்த கருவி சிகிச்சை அளிக்கும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com