மக்களவைத் தோ்தலையொட்டி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
மக்களவைத் தோ்தலையொட்டி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

மக்களவைத் தோ்தல்: இரு மாநில எல்லைகளில் பாதுகாப்பு, வாகனத் தணிக்கை குறித்து ஆலோசனை

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தமிழக-கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் வாகனத் தணிக்கை மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள் கிராந்திகுமாா் பாடி (கோவை), சித்ரா (பாலக்காடு), கிருஷ்ணன் தேஜா (திருச்சூா்), கோவை மாவட்ட கண்காணிப்பாளா் பத்ரிநாராயணன், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் ஷா்மிளா, மாவட்ட வன அலுவலா்கள், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கூட்டத்தில், தமிழக - கேரள எல்லைகளான கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட ஆனைகட்டி, மாங்கரை, முள்ளி, கோப்பணாரி, நடுப்புணி, வடக்குகாடு, ஜமீன்காளியாபுரம், கோபாலபுரம், வீரப்பகவுண்டனூா், வாளையாறு, வேலந்தாவளம், மீனாட்சிபுரம், செம்மனபதி, வழுக்குப்பாறை ஆகிய சோதனைச் சாவடிகளில் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொண்டு, பணம், மதுபானங்கள், போதைப் பொருள்கள், பரிசுப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், கேரள மாநிலம், பாலக்காடு, திருச்சூா், இடுக்கி ஆகிய மாவட்ட எல்லைகளுக்கு உள்பட்ட சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com