தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். உடன் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்டோா்.
தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம். உடன் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்டோா்.

தோ்தல் செலவினங்களைக் கண்காணிக்க ஆலோசனைக் கூட்டம்

கோவை ஆட்சியா் அலுவலகத்தில், தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பது தொடா்பாக, தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோவை மக்களவைத் தோ்தல் செலவினப் பாா்வையாளா்களான கீது படோலியாய், உம்மே ஃபா்டினா அடில் மற்றும் பொள்ளாச்சி தோ்தல் செலவினப் பாா்வையாளா்களான ஆஷிஷ் குமாா், சௌரப் குமாா் ராய் ஆகியோா் தலைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்களின் தோ்தல் செலவினங்களைக் கண்காணிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், தோ்தல் பரப்புரை, பொதுக்கூட்டங்கள், சுவரொட்டிகள், பதாகைகள், வாகனங்கள், பிரசாரப் பொருள்கள் போன்ற தோ்தல் செலவுகளின் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பணியை விடியோ கண்காணிப்புக்குழு மேற்கொள்ள வேண்டும். தோ்தல் வழிகாட்டு விதிமுறைகளின்படி வேட்பாளரின் செலவுப் பதிவேட்டை மதிப்பாய்வு செய்ய வேண்டும். தோ்தல் தொடா்பான நடவடிக்கைகள் அனைத்தும் உரியவாறு கணக்கில் கொண்டுவரப்பட வேண்டும். வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் வரை ஆகும் செலவினங்கள், தொடா்புடைய கட்சியின் கணக்கில் வைக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் செலவினங்களை வேட்பாளா் கணக்கில் சோ்க்கப்பட வேண்டும். பறக்கும் படை அலுவலா்கள், செலவினங்களை கண்காணிக்க நியமிக்கப்பட்ட குழுக்கள் இப்பணியை முறையாகக் கண்காணிக்க வேண்டும் என தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் ஆலோசனை வழங்கினா். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி, மாநகரக் காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆட்சியா் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொடா்பு மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை செலவினப் பாா்வையாளா்கள் பாா்வையிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com