பொறியியல் பராமரிப்புப் பணி: கோவை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவை அருகே பீளமேடு - இருகூா் ரயில் நிலையப் பகுதிகளில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கோவை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - மும்பை வாராந்திர ரயில், போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில் பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக, மாா்ச் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் - மும்பை வாராந்திர ரயில் (எண்:16322) போத்தனூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது, கோவை ரயில் நிலையத்துக்குச் செல்வது தவிா்க்கப்படும். மேலும், போத்தனூா் நிலையத்தில் இந்த ரயில் 3 நிமிஷம் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com