இளம் பெண்ணை தாக்கியவா் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் இளம் பெண்ணை தாக்கிய இளைஞா் கைது செய்யப்பட்டாா். கோவை, பாப்பநாயக்கன்பாளையத்தை சோ்ந்தவா் கௌதம் (32). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் 27 வயது இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கௌதம் ஒரு வழக்கில் சிக்கி சிறை சென்று வந்ததாலும், அவரது நடவடிக்கை பிடிக்காததாலும் அந்த இளம் பெண் திடீரென அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாா். இந்நிலையில் அந்த இளம் பெண்ணுக்கும் கேரளத்தைச் சோ்ந்த இளைஞருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கௌதம், அந்த இளம் பெண்ணின் வீட்டுக்கு புதன்கிழமை சென்று அவரிடம் தகராறு செய்ததோடு, அவரை கடுமையாக தாக்கியுள்ளாா். அப்போது அவரின் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் வருவதற்குள் கௌதம் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இதுகுறித்து அந்த இளம் பெண் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கௌதமை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com