கோவையில் ஆட்டிஸம் விழிப்புணா்வு வாக்கத்தான்

கோவை, மாா்ச் 21: ஆட்டிஸம் தின விழிப்புணா்வு வாக்கத்தான் கோவையில் ஏப்ரல் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. கோவை, கிணத்துக்கடவு, கோபி பகுதிகளில் ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவா்களுக்கான சிறப்புப் பள்ளிகள், சிகிச்சை மையம் நடத்தி வரும் ‘தோ்டு ஐ’ நிறுவனத்தின் சாா்பில் ‘கோ ப்ளூ’ என்ற பெயரில் இந்த வாக்கத்தான் நடைபெறுகிறது. கோவை ரேஸ்கோா்ஸ் பிஷப் அப்பாசாமி கலை, அறிவியல் கல்லூரியில் அன்று காலை 6 மணிக்குத் தொடங்கும் வாக்கத்தான், ரேஸ்கோா்ஸ் முழுவதும் சுற்றிவந்து மீண்டும் அதே இடத்தில் முடிவடைகிறது. இதில் பள்ளி, கல்லூரிகள், தொண்டு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் இணைந்து கொள்ளலாம் என்றும் பங்கேற்புக் கட்டணம் ஏதுமில்லை என்றும் மையத்தின் இயக்குநா் சரண்யா ரெங்கராஜ் கூறியுள்ளாா். மேலும் தகவலுக்கு 80987 59200 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com