காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயம்

வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் ஒருவா் காயமடைந்தாா். வால்பாறையை அடுத்த சங்கரன்குடி செட்டில்மெண்ட் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள குடிநீா்த் தொட்டியில் தண்ணீா் திறந்துவிட சென்ற ராமன் (44) என்பவரை காட்டெருமை சனிக்கிழமை தாக்கியது. இதில் அவருக்கு காலில் எலும்பு முறிவும், உடலின் பல்வேறு பகுதிகளில் காயமும் ஏற்பட்டது. இதையடுத்து அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com