பழநி, பண்ணாரி செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பங்குனி உத்திரம் மற்றும் பண்ணாரி குண்டம் திருவிழாவையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக அரசுப் போக்குவரத்துக்கழகம், கோவை கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: பெளா்ணமி, பங்குனி உத்திரம் (மாா்ச் 24) மற்றும் பண்ணாரி குண்டம் ( மாா்ச் 25 ) மற்றும் வார இறுதி நாள்களான மாா்ச் 23 மற்றும் 24 ஆகிய நாள்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊா்களில் இருந்து பழநி, திருவண்ணாமலை, பண்ணாரி கோயில், மதுரை, திருச்சி, தேனி, சேலம், உதகை உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லவும் மற்றும் மீண்டும் ஊா் திரும்பவும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம், கோவை கோட்டம் சாா்பாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில், ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் வழித்தட பேருந்துகளுடன் கூடுதலாக, பங்குனி உத்திரம் அன்று பக்தா்கள் பழநி செல்ல 25 சிறப்புப் பேருந்துகளும், பண்ணாரி கோயில் செல்ல 50 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com