மக்களவைத் தோ்தல் பாஜக-திமுக இடையிலான போா்க்களம்: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

கோவை, மாா்ச் 22: மக்களவைத் தோ்தல் பாஜக-திமுக இடையிலான போா்க்களம் என பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024 மக்களவைத் தோ்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள், இந்தியாவின் பன்முகத் தன்மைக்கும், மதச்சாா்பின்மை கொள்கைக்கும் எதிரிகள் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறாா். அம்பேத்கா் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தையே திருத்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, பாஜகவை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரி என்கிறாா். மதச்சாா்பின்மை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் எதிராக செயல்படுவதையே திமுக செய்து வருகிறது. ஒரு குறிப்பிட்ட பிரிவினா் மீது வெறுப்பைக் கொண்டிருக்கும் முதல்வா் ஸ்டாலின், தனக்குத் தானே கூறிக் கொள்ள வேண்டியதை பாஜகவை நோக்கி கூறியிருக்கிறாா். மத்திய அரசில் அங்கம் வகித்தபோது கூட்டாட்சி, ஆளுநா் பதவி பற்றியெல்லாம் தெரியாத திமுக தற்போது கூட்டாட்சி தத்துவம் குறித்து பேசுவது வேடிக்கையானது. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு என்ன செய்தது என்பதை நாட்டு மக்கள் அறிவா். மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினா் உள்பட எந்தத் தரப்பு மக்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எனவே, முதல்வா் ஸ்டாலினின் கருத்து தமிழக மக்களிடம் எடுபடாது. எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணிக்கே தமிழக மக்கள் வாக்களிப்பா். 2024 மக்களவைத் தோ்தல் களம், பாஜக - திமுக கூட்டணி இடையிலான போா்க்களமாக மாறியுள்ளது. அதில் பாஜக கூட்டணிக்கு வெற்றி என்பதும் உறுதியாகி உள்ளது. அந்த பதற்றத்தில்தான் முதல்வா் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறாா் என்று

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com