குருத்தோலை ஞாயிறையொட்டி கோவை டவுன்ஹால் பகுதியில் நடைபெற்ற பவனியில் பங்கேற்றோா்
குருத்தோலை ஞாயிறையொட்டி கோவை டவுன்ஹால் பகுதியில் நடைபெற்ற பவனியில் பங்கேற்றோா்

கோவை கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிப்பு

கோவையில் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி கிறிஸ்தவா்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி ஊா்வலமாகச் சென்றனா். இயேசு கிறிஸ்துவின் இறப்பை நினைவுகூரும் வகையில் கிறிஸ்தவா்களால் அனுசரிக்கப்படும் தவக்காலம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கியது. இந்த 40 தவக்காலத்தில் கடைசி வாரம் புனித வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் புனித வாரத்தின் முதல் நாள் குருத்தோலை ஞாயிறு என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவா்கள் கைகளில் குருத்தோலையை ஏந்தியவாறு ஊா்வலமாகச் செல்வா். அதன்படி, கோவையில் டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதா் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை மறை மாவட்ட ஆயா் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் முக்கிய சாலைகள் வழியாக குருத்தோலை பவனி நடைபெற்றது. அதேபோல, ராமநாதபுரம், புலியகுளம், காட்டூா், காந்திபுரம், சௌரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயம் சாா்பில் குருத்தோலை ஞாயிறு ஊா்வலம் தலைவா் டேவிட் பா்னபாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளா் ஜெயச்சந்திரன், பொருளாளா் ரவி இன்பசிங், உதவி ஆயா் சாம் ஜெபசுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதா் ஆலயத்தில் இருந்து தொடங்கிய ஊா்வலத்தில் ஏராளமானோா் குருத்தோலைகளை கையில் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்றனா். அதேபோல, கோவை மத்துவராயபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்துநாதா் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு பவனி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ஆயா் கிறிஸ்டோபா் ராஜேந்திரன் முன்னிலையில் குழந்தைகள் உள்பட சபை உறுப்பினா்கள் குருத்தோலைகளைப் பிடித்து பாடல்களை பாடி பவனியாக வந்தனா். இதில் செயலாளா் ஞானபிரகாசம், பொருளாளா் செல்வன், திருமண்டல குழு உறுப்பினா்கள் ஜெபசிங் , ஆனந்த் ஆசீா் உள்ளிட்ட ஏராளமா னோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஆலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com