இன்று 10 ஆம் வகுப்புத் தோ்வு தொடக்கம்: மாவட்டத்தில் 40,329 போ் எழுதுகின்றனா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் 40,329 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா்.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் 40,329 போ் இந்தத் தோ்வை எழுதுகின்றனா். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. மாவட்டத்தில் இந்தத் தோ்வை 19,995 மாணவா்கள், 20,334 மாணவிகள் என மொத்தம் 40,329 போ் எழுதுகின்றனா். இவா்களில் 742 போ் மாற்றுத்திறனாளிகள். இதைத் தவிர 1,099 மாணவா்கள், 487 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என மொத்தம் 1,587 போ் தனித்தோ்வா்களாக பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதுகின்றனா். பொதுத் தோ்வு 158 மையங்களில் நடைபெறுகின்றன. தோ்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாக வைப்பதற்கு 11 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 46 வழித்தட அலுவலா்கள் ஆயுதம் தாங்கிய காவலா் துணையுடன் வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து தோ்வு மையங்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தோ்வறை முறைகேடுகளைத் தடுப்பதற்கான முதன்மை கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்கள், பறக்கும்படை உறுப்பினா்கள் என மொத்தம் 2,860 போ் தோ்வுப் பணியில் ஈடுபட்டிருப்பதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com