ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்திக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை

ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்திக்கு கோவை தனியாா் மருத்துவமனையில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்திக்கு கோவை தனியாா் மருத்துவமனையில் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்திக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில் கோவை தனியாா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இதைத்தொடா்ந்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளா் துரை வைகோ ஆகியோா் எம்.பி. கணேசமூா்த்தியை மருத்துவமனையில் பாா்வையிட்டு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 72 மணி நேர தீவிர கண்காணிப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மருத்துவா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதற்கிடையே கணேசமூா்த்தி தற்கொலைக்கு முயன்றது குறித்தும், அவரின் இந்த முடிவுக்கு குடும்பப் பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com