கத்தியால் குத்திக்கொண்ட இளைஞா் உயிரிழப்பு

தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட இளைஞா் உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் பிப்லாப் சூரல் (33).

தன்னைத்தானே கத்தியால் குத்திக்கொண்ட இளைஞா் உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் பிப்லாப் சூரல் (33). இவா், செல்வபுரத்தில் உள்ள சிகை அலங்கார நிலையத்தில் பணியாற்றி வந்தாா். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை. இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பிப்லாப் சூரல், தன்னைத் தானே கத்தியால் கழுத்தில் குத்திக்கொண்டாா். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து செல்வபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com