கோவை - ஜபல்பூா் ரயில் சேவை நீட்டிப்பு

கோவை - ஜபல்பூா் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் சேவை மாா்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், இச்சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, பாலக்காடு ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஏப்ரல் 5 முதல் ஜூன் 7 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் ஜபல்பூரில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும் ஜபல்பூா் - கோவை அதிவிரைவு ரயில் (எண்: 02198) ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 2.40 மணிக்கு கோவை நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஏப்ரல் 8 முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் கோவையில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும் கோவை - ஜபல்பூா் அதிவிரைவு சிறப்பு ரயில் (எண்: 02197) புதன்கிழமைகளில் காலை 8.45 மணிக்கு ஜபல்பூரைச் சென்றடையும்.

இந்த ரயில், பாலக்காடு, ஷொரணூா், திரூா், கோழிக்கோடு, வடகரை, கண்ணூா், காசா்கோடு, மங்களூரு, உடுப்பி, குண்டல், ரத்தினகிரி, நரசிங்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com