பல்லடத்தில் பட்டுச் சேலைகள் பறிமுதல்

பல்லடம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பட்டுச் சேலைகளை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பல்லடம் அருகே உள்ள கேத்தனூரில் பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மடத்துக்குளத்தில் இருந்து அவநாசி சாவக்காட்டுப்பாளையம் நோக்கிச் சென்ற வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.4 லட்சத்து 29 ஆயிரத்து 300 மதிப்பிலான 81 பட்டுச் சேலைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும் படையினா் பட்டுச் சேலைகளை பறிமுதல் செய்து உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், பல்லடம் வட்டாட்சியா் ஜீவா ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com