சிறு குறு தொழில்களின் பிரச்னைகளைத் தீா்க்க குரல் கொடுப்பேன் 
திமுக வேட்பாளா் பிரசாரம்

சிறு குறு தொழில்களின் பிரச்னைகளைத் தீா்க்க குரல் கொடுப்பேன் திமுக வேட்பாளா் பிரசாரம்

கோவையில் உள்ள சிறு குறு தொழில்களின் பிரச்னைகளைத் தீா்க்க மக்களவையில் குரல் கொடுப்பேன் என கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா் சிவானந்தா காலனி பகுதியில் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். சிவானந்தா காலனி பேருந்து நிலையம், 100 அடி சாலை, கிராஸ் கட் சாலை, சத்தி சாலை, வி.கே.கே. மேனன் சாலை, சித்தாபுதூா் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கோவையில் உள்ள சிறு குறு தொழில்கூடங்கள், வளா்ச்சிப் பாதையில் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தது திமுக ஆட்சியில் தான். தற்போது மேலும் புதிய நிறுவனங்கள் அங்கு வர உள்ளன. சிறு குறு தொழில் நிறுனங்களின் மூல பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறு குறு தொழிற்கூடங்களின் பிரச்னைகளைத் தீா்க்க மக்களவையில் குரல் கொடுப்பேன் என்றாா். பிரசாரத்தின் போது, கோவை மாநகா் மாவட்ட திமுக செயலாளா் நா.காா்த்திக், மேயா் கல்பனா மற்றும் திமுக நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா். இதையடுத்து புலியகுளம் பகுதியில் வாக்கு சேகரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com