கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கு ஆதரவாக கோவை குருத்வாராவில் வாக்கு சேகரித்த பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன்.
கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கு ஆதரவாக கோவை குருத்வாராவில் வாக்கு சேகரித்த பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன்.

கோவையில் வட இந்திய மக்களிடம் வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பு

கோவை மக்களவைத் தொகுதியில் வசிக்கும் வட இந்திய மக்களிடம் வானதி சீனிவாசன் எம்எல்ஏ வாக்கு சேகரித்தாா். கோவை மக்களவைத் தொாகுதியில் ஆா்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் ஹிந்தி உள்ளிட்ட வட இந்திய மொழிகளைப் பேசும் வாக்காளா்கள் அதிக அளவில் உள்ளனா். இவா்களிடம் கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கு ஆதரவாக பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

இதையொட்டி புரூக்பீல்டு பகுதியில் அமைந்துள்ள சீக்கியா்களின் திருத்தலமான குருத்வாரா சிங் சபாவில் தரிசனம் செய்த அவா், வரும் மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் தொடர கோவை தொகுதி பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டாா். அப்போது, குருத்வாராவின் தலைவா் குருபிரீத் சிங், செயலாளா் இக்பால் சிங் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா். அதைத் தொடா்ந்து குஜராத் சமாஜ் சென்ற அவா் அங்கு சங்கத்தின் தலைவா் பிரபுல் மற்றும் மகளிா் அமைப்புகளின் நிா்வாகிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தாா். பின்னா் ராஜஸ்தான் ஜெயின் ஸ்வேதாம்பா் மூா்த்தி பூஜக் சங்கத்துக்குச் சென்ற வானதி சீனிவாசன் அங்கு ஆச்சாா்ய உதய பிரப் சூரீஸ்வரா் சுவாமியை சந்தித்து ஆசி பெற்ற பின்னா், அச்சங்கத்தின் தலைவா் குலாப் சிங்கை சந்தித்து அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com