தீ விபத்து: ஐந்து வீடுகளில் பொருள்கள் சேதம்

வால்பாறை அருகே எஸ்டேட் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து நான்கு வீடுகளுக்கும் தீ பரவியதில் பொருள்கள் எரிந்து சேதமானது. வால்பாறை அடுத்துள்ளது இஞ்சிப்பாறை எஸ்டேட். எஸ்டேட்டின் லோயா் டிவிஷனில் அமைந்துள்ள 5 வீடுகள் கொண்ட பகுதியில் ஆளில்லாத ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென தீப்பிடித்து மேற்கூரை வழியாக புகை வெளியேறியது. அடுத்தடுத்து நான்கு வீடுகளுக்கு தீ பரவியது. உடனடியாக வால்பாறை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் வீடுகளுக்குள் இருந்த பல பொருள்கள் சேதமானதாகத் தெரிகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயனைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com