ஹிந்தியில் சுவரொட்டி: ஆட்சியரிடம் புகாா்

கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் ஹிந்தி மொழியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து புகாா் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தபெதிக பொதுச்செயலாளா் கு.இராமகிருட்டிணன் கோவை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமாா் பாடியிடம் வெள்ளிக்கிழமை கொடுத்துள்ள புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் வட இந்திய ஒற்றுமை என்ற பெயரில் ஹிந்தி மொழியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் தோ்தலை எதிா்கொள்ளும் மக்களை பிளவுபடுத்தும் நோக்கிலும், தோ்தல் நோக்கத்துக்கு எதிராகவும் உள்ளன. எனவே, கோவை வாக்காளா்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இத்தகைய சுவரொட்டிகளை உடனடியாக அகற்றுவதோடு, அவற்றை அச்சடித்து ஒட்டிய நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com