பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சேவூா் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சேவூா் அருகே 35 வயது மதிக்கத்தக்க பெண் பெரியகானூா் குளத்துக்கு சனிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த வினோத் (20) என்பவா், அந்தப் பெண்ணை பின் தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளாா். அப்பெண் கூச்சலிட்டதையடுத்து அவா் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளாா். இதையடுத்து, அப்பகுதி மக்கள் வினோத்தை பிடித்து, சேவூா் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். வினோத் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com