கோவையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
கோவையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.

வருமான வரித் துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வருமான வரித் துறை, பாஜகவை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் கட்சி முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்று கூறி, அக்கட்சிக்கு அபராதம், அதற்கான வட்டியாக ரூ.1,823 கோடி செலுத்த வருமான வரித் துறை உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கில் வருமான வரித் துறை மூலம் பாஜக அரசு இவ்வாறு நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டி கோவையில் காங்கிரஸ் கட்சியினா் பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அகில இந்திய காங்கிரஸ் செயலா் மயூரா எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் கருப்புசாமி, மாநில பொதுச் செயலா் கணபதி சிவகுமாா், வீனஸ் மணி, குருசாமி, இருகூா் சுப்பிரமணியம், சுரேஷ்குமாா், வழக்குரைஞா் ஜெரோம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com